நெல்லையில் நவராத்திரி கொலுவில் பிரதமரின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு

நெல்லையில் நவராத்திரி கொலுவில் பிரதமரின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு
X

கொலுவில் இடம் பெற்றுள்ள பிரதமரின் திட்டங்கள்.

நவராத்திரி கொலுவில் ஹைலைட்டாக பிரதமரின் 7 ஆண்டுகள் சாதனை குறித்த விளக்க திட்டம் இடம் பெற்றிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

நெல்லை மாவட்டம் என் ஜி ஓ காலனியில் உள்ள எழில் நகரை சேர்ந்தவர் லதா பிரசன்னா. இவரது வீட்டில் தலைமுறை, தலைமுறையாக நவராத்திரி கொலு வைத்து பூஜை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள கொலுவில் பெருமாள் கோயில், ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல், துவாரபாலகர், உற்சவர் பல்லக்கில் இருப்பது, பெரிய திருவடி, சிறிய திருவடி ,பெருமாளின் நான்கு திருக்கோலம் இடம் பெற்றிருந்தன.

மேலும் ஹைலைட்டாக கொலுவோடு இணைந்து பாரத பிரதமரின் திட்டங்கள் குறித்து விலக்க அட்டைகள் வைக்கப்பட்டிருந்தது. கொலுவை பார்க்க வரும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இதுகுறித்து லதா பிரசன்னா கூறியதாவது:-

நாங்க தலைமுறை தலைமுறையாக கொலு வச்சுட்டு வர்றோம். இந்த வருஷ கொலுவோட ஹைலைட் மோடியோட திட்டங்களை காட்சிப்படுத்தியது தான். மோடியின் ஏழு வருஷத்துல அவரோட ஆட்சியில் இந்தியாவுக்காக செய்த திட்டங்களான கங்கை நதி தூய்மைபடுத்துதல், ஆர்ட்டிக்கிள் 370, ஸ்மார்ட் சிட்டி, முத்ரா, ஆவாஸ் யோஜனா, டிஜிட்டல் இந்தியா, உஜ்வாலா, ஜெய்ஸ்ரீராம், ஆயுஸ் மான் பாரத், தூய்மை இந்தியா, ஜன் தன் யோஜனா இதெல்லாம் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வுக்காக வைத்து இருக்கிறோம்.

இந்த கொலுவை பார்க்கும் எல்லாரும் கேக்குறாங்க, இது என்ன கிளீன் இந்தியா? ஆயுஷ்மான் பாரத்னா என்ன? என கேட்கிறார்கள். அந்த திட்டத்தை மக்களுக்கு நாங்க எடுத்து சொல்கிறோம். தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக நாங்க இதை எல்லாம் சொல்கிறோம். மேலும் மக்கள் பயன்பெறும் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதிலிருந்து எல்லா விளக்கமும், எல்லாத்துக்கும் சொல்கிறேன். தினமும் காலையில் எழுந்து விளக்கேத்தி பூஜைகள் செய்து வர்றவங்க எல்லோருக்கும் பிரசாதம் கொடுக்கிறோம் என்று கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!