/* */

தவறாக மருந்துகள் உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு

தவறாக மருந்துகள் உட்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து அரசு சித்த கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

தவறாக மருந்துகள் உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு
X

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி சார்பில் தவறாக மருந்துகள் உட்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தேசிய மருந்துகளின் எதிர்விளைவு கண்காணிப்பு வாரம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக அரசு சித்த மருத்துவ கல்லூரி ஆயுஷ் மருந்துகளின் எதிர்விளைவு கண்காணிப்பு துறை சார்பில் இன்று தவறாக மருந்து உட்கொள்ளும் போது ஏற்படும் எதிர்விளைவுகள் மற்றும் அதனை மருத்துவப் பணியாளர்களிடம் பதிவு செய்தல் போன்றவை பற்றி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்த மரியா, துணை முதல்வர் டாக்டர் செளந்தரராஜன் ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர்.

சித்தா கல்லூரியில் தொடங்கிய பேரணி வ.உ.சி மைதானம் வழியாக சென்று மீண்டும் கல்லூரியில் பேரணி முடிவடைந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். பேரணியின் போது விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

Updated On: 19 Sep 2022 2:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்