கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பாளையங்கோட்டை சிறை மருத்துவமனையில் அனுமதி

கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பாளையங்கோட்டை சிறை மருத்துவமனையில் அனுமதி
X

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா

பாளையங்கோட்டை மத்திய சிறையில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா அடைக்கப்பட்ட நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் இந்து மதக் கடவுள்களை விமர்சித்த குற்றச்சாட்டில் கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா அடைக்கப்பட்ட நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அருமனையில் ஆர்ப்பாட்டத்தில் பேசிய பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா, இந்துக்கள், இந்து கோவில்கள் இந்து மத நம்பிக்கைகள் குறித்தும் நாகர்கோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி குறித்தும் பாரத பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தும் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா மீது போலீசார் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் தலைமறைவாக இருந்த பொன்னையாவை மதுரையில் வைத்து இன்று போலீசார் கைது செய்து கன்னியாகுமரி மாவட்டம் கொண்டு செல்லப்பட்ட ஜார்ஜ் பொன்னாயாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க குழித்துறை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்வம் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, அவர் பாளையங்கோட்டையில் உள்ள சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜார்ஜ் பொன்னையா உடல்நலக்குறைவு காரணமாக சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி