குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் வீடு பெறுவதற்கு விண்ணப்ப படிவம்

குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் வீடு பெறுவதற்கு விண்ணப்ப படிவம்
X

விமன் இந்தியா மூவ்மென்ட சார்பாக,  அரசின் அடுக்குமாடி குடியிருப்பு விண்ணப்பம் பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

வீடில்லா ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் கீழ், வீடு பெறுவதற்காக விமன் இந்தியா மூமண்ட் சார்பில், விண்ணப்பம் வழங்கப்பட்டது.

தமிழக அரசின் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில், வீடு இல்லாத ஏழை மக்களுக்கு, அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் கீழ், வீடு பெறுவதற்கான விண்ணப்பப்படிவம் பூர்த்தி செய்து உரிய அதிகாரிகளிடம் நேரடியாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை, விமன் இந்தியா மூவ்மென்ட் நெல்லை மாநகர் மாவட்ட துணைத்தலைவர் நூர் நிஷா தலைமையில், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து துவக்கி வைத்தார்.

எஸ்டிபிஐ கட்சி 48வது வார்டு மகளிர் அணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வருமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வீடு பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை, பூர்த்தி செய்தனர். பூர்த்தி செய்யப்பட படிவத்தை நேரடியாக பாளையங்கோட்டை குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் இடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பேட்டை மேற்கு பகுதி பொருளாளர் சாதிக், மகளிர் அணி கிளை நிர்வாகிகள் ஹாஜி ரம்ஜான், ரஹ்மத் நிஷா, ஜன்னத், செய்யது அலி உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!