பிரான்சிஸ் பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா விளையாட்டு போட்டிகள்: போலீஸ் கமிஷனர் பரிசு
நெல்லையில், பிரான்சிஸ் பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் காவல்துறை ஆணையர் சந்தோஷ்குமார்.
நெல்லை வண்ணாரப்பேட்டை பிரான்சிஸ் பொறியியல் கல்லூரியில் நடந்த 2022ம் ஆண்டுக்கான விளையாட்டு போட்டி விழாவில் நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் சந்தோஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
எப்.எஸ். பொறியியல் கல்லூரி மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்து வருகின்றனர். ஏற்கனவே மாநில அளவிலான பின்னோக்கிய நீச்சல் போட்டியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் டேட்டா சயின்ஸ் துறை முதலாண்டு மாணவர் ஆலென் ரோல் தங்கம் மற்றும் வெண்கல பதக்கத்தை வென்றனர். சேலத்தில் நடந்த 49வது தமிழ்நாடு மாநில ஜூனியர் ஓபன் ஃபைட் ரேட்டேட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரகாஷ் ராஜ் (3ம் ஆண்டு மாணவர்) கலந்துகொண்டார்.
உத்தரபிரதேச மாநிலம் பெரெலியில் உள்ள ரோஹில் காந்த் பல்கலைக்கழகத்தில் நடந்த செபக் டக்ரா போட்டியில் நபராஜன் (முதலாம் ஆண்டு மாணவர்) அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் விளையாடி கல்லூரிக்கு பெருமை சேர்த்தார். எப்.எக்ஸ். கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் விளையாட்டு போட்டிகளை பங்கேற்பதை கல்லூரி நிர்வாகம் ஊக்குவித்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டி விழா எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் கைப்பந்து, கூடை பந்து, கபாடி, கோகோ மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் ஐ.டி துறை இறுதி ஆண்டு மாணவர் அன்பு சிரஞ்சீவியும், பெண்கள் பிரிவில் மாணவி லிஸ்பா தனிப்பட்ட சாம்பியன்ஷிப் வென்றனர்.
இந்த விழாவுக்கு ஸ்காட் கல்லூரி கல்விக்குழும நிறுவனர்.கிளிட்டஸ்பாபு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் சந்தோஷ் குமார் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் ஆகியவை வழங்கி பாராட்டினார். விழாவில் நிர்வாக இயக்குநர் அருண்பாபு, பொதுமேலாளர் (வளர்ச்சி) முனைவர் ஜெயக்குமார், பொதுமேலாளர் (நிர்வாகம்) கிருஷ்ணகுமார், முதல்வர் முனைவர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை வளாக மேலாளர் பேராசிரியர்.சகாரிய கேபிரியல் வழிகாட்டுதலின்படி உடற்கல்வி இயக்குநர்கள் சுரேஷ்குமார், சாமுவேல் அமர்நாத், நந்தினி ஆகியோர் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu