சசிகலா குறித்து அவதூறாக பேசியதாக பழனிசாமி உருவபொம்மையை எரிக்க முயற்சி

சசிகலா குறித்து அவதூறாக பேசியதாக  பழனிசாமி உருவபொம்மையை எரிக்க முயற்சி
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அமமுகவினர்

வண்ணார்பேட்டையில் சசிகலா குறித்து அவதூறாக பேசியதாக எடப்பாடி பழனிச்சாமியின் உருவபொம்மையை அமமுக ஆதரவாளர்கள் எரிக்க முயற்சி

சசிகலா குறித்து அவதூறு பரப்பி வருவதாக கூறிய திருநெல்வேலியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை அம்மா மக்கள் முன்னேற்ற ஆதரவாளர்கள் அதிமுக கொடியுடன் வந்து எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுகவின் பொன்விழா ஆண்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்த நிலையில் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பெயருடன் சசிகலா அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பின் போது எதிர்ப்பினை தெரிவித்ததோடு அவர் குறித்த பல்வேறு தகவல்களையும் கூறினார். அதேபோன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் சசிகலா குறித்தும், அவரின் நடவடிக்கை குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அவர்களின் இந்த நடவடிக்கையை கண்டித்து திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஆதரவாளர்கள் அதிமுக கொடியுடன் வந்து எடப்பாடி பழனிச்சாமியின் உருவபொம்மையை முழக்கங்களை எழுப்பி எரிக்க முயன்றனர். சுதாரித்துக் கொண்டு ஓடிவந்த காவல்துறையினர் உருவபொம்மையை அவர்களிடமிருந்து கைப்பற்ற முயன்றனர். இதனால் காவல்துறையினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து உருவபொம்மையை கைப்பற்றிய காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஆதரவாளர்கள் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதோடு, சசிகலாவிற்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பினர். உருவ பொம்மையை எரிக்க முயன்ற இந்த போராட்டத்தால் வண்ணாரப்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!