நெல்லையில் அகில இந்திய இமாம்ஸ் கவுன்சில் மாவட்ட செயற்குழு கூட்டம்

நெல்லையில் அகில இந்திய இமாம்ஸ் கவுன்சில் மாவட்ட செயற்குழு கூட்டம்
X

அகில இந்திய இமாம்ஸ் கவுன்சில் நெல்லை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் மெளலவி எஸ்.முஹம்மது ராசிக் பைஜி தலைமையில் மேலப்பாளையத்தில் நடைபெற்றது. 

போதைப்பொருள் புழக்கத்தை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என அகில இந்திய இமாம்ஸ் கவுன்சில் நெல்லை மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அகில இந்திய இமாம்ஸ் கவுன்சில் நெல்லை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் மெளலவி எஸ்.முஹம்மது ராசிக் பைஜி தலைமையில் மேலப்பாளையத்தில் நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் முஸ்தபா ஜாபர் மஸ்லஹி வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக மண்டல பொறுப்பாளர் இபுராஹிம் உஸ்மானி மற்றும் மாநில செயரற்குழு உறுப்பினர் மீரான் முகைதீன் அன்வாரி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வருகின்ற மூன்று ஆண்டுகளுக்கான 2022-2024 நிர்வாக பணிகள் திட்டமிடப்பட்டது. தொடர்ந்து 73 வது குடியரசு தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டம் பத்தமடை, மானூர், கல்லிடைகுறிச்சி, மேலப்பாளையம் ஆகிய ஊர்களில் கொடியேற்றியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும்.

நெல்லை மாவட்டத்தில் கல்லிடைக் குறிச்சி, பத்தமடை, மேலப்பாளையம் ஆகிய ஊர்களில் டெங்கு போன்ற விஷக் காய்ச்சல் பரவி வருகிறது. இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சுகாதாரத்தை சீர்படுத்த வேண்டும். வெருப்பு பேச்சுக்கள் சமூகத்தின் சமூக நல்லிக்கத்தை சீர் குழைத்து வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக ஹரித்துவாரில் சாமியார்கள் என்ற போர்வையில் பாசிசவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக முடிவு எடுத்ததை வலைதளங்களில் பார்த்தோம். மேலும் இது போன்ற வெறுப்பு பிரச்சாரத்தை மத்திய, மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிிறைவேற்றப்பட்டன.

நெல்லை மாவட்டம் முழுவதும் போதை பொருளால் இன்றைய இளைய சமூதாயம் மற்றும் இளம் சிறார்கள். மாணவச் செல்வங்கள் சீரழவில் சென்று கொண்டிருப்பது வேதனை அழிக்கிறது. மாவட்ட நிர்வாகம் சமூக துரோகிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். அத்தோடு பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்என்று மாவட்ட நிர்வாகத்தை இக்கூட்டம் வலியுறுத்தினர்.

கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் மெளலவி ரசூல் மைதீன் யூசுபி , மேலப்பாளையம் பொருப்பாளர் மெளவி ஷம்சுல் ஹக் அன்வாரி , மாவட்ட துணைத் தலைவர் ஜாகீர் ரஹீமி, கல்லிடைக்குறிச்சி பொருப்பாளர் மெளலவி அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக மெளலவி ஷம்சுல் ஹக் அன்வாரி ஹஜ்ரத் அவர்கள் நன்றி உரை ஆற்றினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்