சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் மது ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் மது ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
X

பாளை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் மது ஒழிப்பு கருத்தரங்கு நடந்தது.

பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் மது ஒழிப்பு கருத்தரங்கு நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் உள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மது ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகம்மது சாதிக் தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி நகர மது ஒழிப்பு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் எல்.முத்துலெட்சுமி சிறப்புரையில் "படிக்கின்ற காலத்தில் மாணவர்கள் மிகவும் ஒழுக்கத்துடனும், கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டுமென்றும் மது, புகையிலை போன்ற போதை வஸ்துகளைப் பயன்படுத்தினால் உடல் நலமும், மனநலமும் பாதிக்கும்" என்றும் குறிப்பிட்டார்.

இளைஞர் நலத்துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ.சே.சேக் சிந்தா மது ஒழிப்பு தொடர்பான உறுதிமொழிகளை வாசிக்க மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். தொடர்ந்து மது ஒழிப்பு தொடர்பாக நடைபெற்ற கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சின்சியர் சமூக சேவை நிறுவனத்தின் நிறுவனர் அ.ஜமால் முகம்மது ஈசா, கல்லூரியின் துணை முதல்வர் ச.மு.அ. செய்யது முகமது காஜா ஆகியோர். வாழ்த்துரை வழங்கினர்.

தேசிய மாணவர் படை இணை அதிகாரி கேப்டன் செய்யது அலி பாதுஷா அனைவரையும் வரவேற்றார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.மகாதேவன், அ.மு.அயூப்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சதக்கத் கிராம மேம்பாட்டுத்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் நி.முகம்மது ரில்வான் நன்றி கூறினார்.

அரசு உதவிப் பெறாப் பாடப்பிரிவுகளின் தலைவர் மு.சாதிக் அலி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியில் துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் திரளான மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

Next Story
ai in future agriculture