நெல்லை சமாதானபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

நெல்லை சமாதானபுரத்தில்  அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
X

நெல்லையில் அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

நெல்லை சமாதானபுரத்தில் வடக்குப்பகுதி அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் தற்போது கோடை காலம் என்பதால் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக நெல்லை மாநகரில் அதிகபட்சம் 100.5 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானதால் வெப்பம் தாழ முடியாமல் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாளையங்கோட்டை வடக்கு பகுதி அ.தி.மு.க. செயலாளர் வழக்கறிஞர் ஜெனி சார்பில் சமாதானபுரம் ரவுண்டானா அருகில் பொதுமக்களுக்கு அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா திறந்துவைத்தார்.

தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பொதுமக்களின் தாகத்தை தீர்க்க இலவசமாக மோர்,நுங்கு, இளநீர், தர்பூசணி, ரஸ்னா, வெள்ளரிக்காய், பழ ஜூஸ் போன்றவைகள் வழங்கப்பட்டது.

அவ்வழியாக சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அ.தி.மு.க.வினர் வழங்கிய இளநீர், நுங்கு போன்ற குளிர்பானங்களை ஆர்வமுடன் வாங்கி சுவைத்தனர். அனல் பறக்கும் வெயிலை தாக்குப் பிடிக்காமல் தவித்த அப்பகுதி மக்கள் இலவசமாக குளிர்பானம் வழங்கப்படும் தகவலறிந்து ஒவ்வொருவரும் தனக்கு ஒன்று குடும்பத்துக்கு ஒன்று என நுங்கு, ஜூஸ், இளநீர் என ஒரே கையில் அனைத்தையும் அள்ளிச் சென்றனர். பலர் தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare