நெல்லையில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்

நெல்லையில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்
X

பாளையங்கோட்டை ஒன்றியத்தில் , அதிமுக வேட்பாளரை ஆதரித்து அதிமுக மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா வாக்கு சேகரித்தார். 

பாளையங்கோட்டை ஒன்றியத்தில் , அதிமுக வேட்பாளரை ஆதரித்து அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடையும் நிலையில், நெல்லை மாவட்டத்தில் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. பாளையங்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர்க்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து, ராமையன்பட்டி பகுதிக்கு அதிமுக மாவட்டச் செயலாளர் தச்சை- கணேசராஜா வாக்கு சேகரித்தார்.

பின்னர், முத்துகுமாரை ஆதரித்து வீடு வீடாகவும், அப்பகுதியில் உள்ள கடைகளுக்கும் சென்று, தச்சை- கணேசராஜா தலைமையில் அதிமுகவினர், தொண்டர்கள் ராமையன்பட்டி பகுதியில் வாக்குகளை சேகரித்தனர். உடன் பாளையங்கோட்டை பகுதி செயலாளர் மருதூர் ராமசுப்பிரமணியன், சின்னதுரை, மகாராஜன் மற்றும் சங்கர், வேலாயுதம், சிவா, கைலாஷ், வரதன், பால்துரை ஆகியோர் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!