எப்.எக்ஸ்.பொறியியல் கல்லூரி மாணவர்களுடன் நடிகர் ஆர்யா கலந்துரையாடல்
நெல்லை வண்ணார்பேட்டை பொறியியல் கல்லூரியில் நடந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ஆர்யா பங்கேற்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.
நெல்லை வண்ணார்பேட்டை பொறியியல் கல்லூரியில் நடந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ஆர்யா பங்கேற்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.
விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக மாணவ, மாணவியரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அவர்களுடன் இணைந்து ஆர்யா நடனமாடினார். இதனையடுத்து மாணவர்களிடையே உடல் பயிற்சி ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையில் கல்லூரியில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட சைக்கிள் கிளப்-ஐ (Cycle Club) மேடையில் தொடங்கி வைத்தார். அப்போது அவர் மாணவர்களோடு சைக்கிள் ஒட்டியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது பலத்த கரகோஷத்துடன் மாணவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பின்னர் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். மேலும், இயற்கை வளத்தைப் பாதுகாப்பது குறித்த நிகழ்வில் மரக்கன்று நட்டார். 44% அண்மையில் தேசிய அளவிலானஸ்மார்ட் இந்தியாஹேக்கத்தான் இறுதிப் போட்டியில் முதல் பரிசான ரூ.1 லட்சம் வென்று சாதனை படைத்த சிவில் துறை மாணவர்கள் கார்த்திக் ராஜா, ரொனால்டோ சாம், சுரேஷ் ராஜ், மஞ்சு, ஜெமிமா கிப்டா, மனோஜ் கிஷோர் மற்றும் ஆலோசகர் உதவிப் பேராசிரியர் சுமில் குமரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மற்றும் சிறந்த இடத்தைப் பெற்ற மாணவியர் தர்ஷினி, கலாதேவி, நிவேதிதா, மாணவர்கள் ஜெபின், மாரி செல்வம், கிளாட்சன் ஆகாஷ் ராஜா மற்றும் பேராசிரியர் அனிதா ஆகியோரையும் நடிகர் ஆர்யாவிழா மேடையில் பாராட்டினார்.
இந்த விழாவில் ஆர்யா பேசுகையில் - இந்நிகழ்ச்சி மூலம் எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. மாணவர்கள் சிறந்து விளங்க காரணமான கல்லூரி நிர்வாகத்தை நான் மனதார பாராட்டுகிறேன். இங்குள்ள மாணவர்கள் கல்வியிலும், கலைத் திறனை நிரூபிப்பதிலும் திறமையாக விளங்குவதை காண்கிறேன். மாணவர்கள் தங்களது வாழ்க்கையில் தடைக்கற்களை, படிக்கட்டுகளாக எண்ணி முன்னேற்றம் காண வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். விழாவில் நடிகர் ஆர்யாவுக்கு கல்லூரி முதல்வர் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், பொதுமேலாளர் முனைவர் K.ஜெயக்குமார், S.கிருஷ்ணகுமார், கணினித்துறை இயக்குநர் முனைவர் M.முகமது சாதிக், வேலைவாய்ப்புத்துறை டீன் ஞானசரவணன், வளாக மேலாளர் சகாரியா காபிரியல், பயிற்சித்துறை இயக்குநர் பாலாஜி மற்றும் பேராசிரியர்கள், ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu