பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் 96வது பட்டமளிப்பு விழா

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் 96வது பட்டமளிப்பு விழா
X

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் 96 வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் 96 வது பட்டமளிப்பு விழாவில் 1227 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் கல்லூரியின் 96வது பட்டமளிப்பு விழா கல்லூரி போப் பிரான்சிஸ் கலையரங்கில் நடைபெற்றது. விழாவில் தூய சவேரியார் கலை மனைகளின் அதிபர் அருட்பணி முனைவர் ஹென்றி ஜெரோம் ஆசியுரை வழங்கினார். கல்லூரி முதல்வர் அருட்பணி மரியதாஸ் சே.ச அனைவரையும் வரவேற்றார். கல்லூரி செயலாளர் அருட்பணி முனைவர் புஷ்பராஜ் வாழ்த்துரை வழங்கினார்.

சத்தீஸ்கர், அமிட்டி பல்கலைக்கழக வேந்தர் மற்றும் (1965-1969) கல்லூரி முன்னாள் மாணவர் முனைவர் செல்வமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 1227 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்திப் பேசினார். இதில் 322 இளங்கலை பட்டமும், 902 முதுகலை பட்டமும் மற்றும் 3 முதுகலை தத்துவவியல் பட்டமும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி புலமுதன்மையர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்வில் புதிய பட்டதாரிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
why is ai important to the future