94 வயதிலும் தளராத தன்னம்பிகை-முதியவருக்கு பாராட்டு

94 வயதிலும் தளராத தன்னம்பிகை-முதியவருக்கு பாராட்டு
X

திருநெல்வேலியில் 94 வயதிலும் அசராமல் உழைத்து வரும் முதியவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தை அடுத்துள்ள தென்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் ஹனிபா (94).இவரது மனைவி ஹஜிரால் பீவி (இறந்து விட்டார்). இவருக்கு திருமணம் ஆன ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.இந்நிலையில் காவலாளி அப்துல் ஹனிபா தனது பேரன், பேத்திகளுடன் தனது கடைசி காலங்களை கழிக்க வேண்டிய வயதில் தனியாக வாழ்ந்து வருகிறார். உழவர் சந்தையே தனது வீடாகவும், அங்கு வரும் விவசாயிகளை தனது குடும்பமாகவும் நினைத்து வாழ்க்கையை நகர்த்தி வரும் முதியவரின் குடும்ப சூழ்நிலையே அதற்கு காரணம் என்றாலும், அவரது தன்னம்பிக்கையை பார்க்கும் அனைவரும் வியந்து போகின்றனர்.இவர் இந்தியா சிமென்ட்டில் 22 ஆண்டுகள் பணி முடித்து, 1973ம் ஆண்டில் வெளி வந்து நெடுஞ்சாலையில் 9 ஆண்டுகள், தாமிரபரணி காலனியில் 3 ஆண்டுகள், மருத்துவமனையில் 2 ஆண்டுகள் என பல்வேறு இடங்களில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இறுதியாக 2000 மாவது ஆண்டில் மகாராஜாநகர் உழவர் சந்தையில் பணிக்கு சேர்ந்து 20 ஆண்டுகள் ஆகிறது.

அப்துல் ஹனிபா உழவர் சந்தையிலே தங்கியுள்ளார். இரவு முழுவதும் சந்தைக்கு காய்கறி வந்து இறங்குவதை கவனித்து வருகிறார்.தொடர்ந்து காலை 4 மணி முதல் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைவித்த காய்கறிகளை உழவர் சந்தைக்கு கொண்டு வரும்போது அவர்களிடம் வருகை பதிவேட்டில் கையொப்பம் வாங்குகிறார். இதில் தாமதமாக வரும் விவசாயிகளை சீக்கிரமாக வரும்படி அன்பாக கடிந்து கொள்கிறார்.

இப்படியாக இவர் செய்யும் பணியை மாதத்தில் ஒரு நாள் கூட ஓய்வு இல்லாமல் தினமும் சரியான நேரத்தில் செய்து வருகிறார். இது குறித்து அப்துல்ஹனிபா கூறும் போது, தமிழக அரசு எனக்கு உதவி தொகை வழங்குகிறது. உழவர் சந்தையில் சம்பளம் பெறுகிறேன் இதை கொண்டு வாழ்க்கையை நடத்தி வருகிறேன். நான் வேலை பார்த்து சம்பாதித்த பணத்தில் மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளேன். மகனுக்கு வைத்திய செலவு செய்தேன்.

தற்போது எனக்கு யாருடைய ஆதரவும், அடைக்கலமும் இல்லாமல் தவிக்கிறேன். என்றாலும் நான் இறப்பதற்கு முன்பு பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் தனது இறுதி நாள் செலவுக்கு பணம் சேர்த்து வைத்து வீட்டு இறக்க வேண்டும் என்பது தான்.கடவுளிடமும் அதை தான் தினமும் வேண்டுவேன் என்று கலங்கிய கண்களுடன் கூறினார்.94 வயதிலும் அசராமல் தன்னம்பிக்கையுடன் உழைக்கும் முதியவரை அங்குள்ள அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!