/* */

மகேந்திரகிரி ISRO வில் இருந்து 8000 லிட்டர் திரவ ஆக்சிஜன் நெல்லைக்கு வந்தது

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து 8000 லிட்டர் திரவ ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

HIGHLIGHTS

மகேந்திரகிரி ISRO வில் இருந்து 8000 லிட்டர் திரவ ஆக்சிஜன் நெல்லைக்கு வந்தது
X

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து 8000 லிட்டர் திரவ ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது . நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள 13 ஆயிரம் கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்ஸிஜன் சேமிப்பு கிடங்கிலும் மற்றொரு 6,000 லிட்டர் கொள்ளளவு உள்ள மற்றொரு சேமிப்பு கிடங்கில் இவை நிரப்பப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டத்தில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனான சிகிச்சைக்கு அளிப்பதற்காக 1240 படுக்கை வசதிகள் உள்ளன. மேலும் இதில் சுமார் 800 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .

கடந்த சில நாட்களாக நெல்லை மாவட்டத்தில் நாளுக்கு நாள்கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது .நெல்லை மாவட்டத்தில் 11 தனியார் மருத்துவமனைகளில் சுமார் 450 படுக்கை வசதிகள் கொரோனா சிகிச்சைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன .

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு புதிய கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிப்பதில்லை. இதனால் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி அனைத்து படுக்கைகளும் நிரம்பிவிட்டன.

ஆக்ஸிஜனின் தேவை பல மடங்கு அதிகமாகியது . அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு மெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷன் மூலமாக சிலிண்டர் ஆக்சிஜன் தேவைக்காக உடனடியாக திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது .

இந்த சூழ்நிலையில் நேற்று மாலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மொத்த கொள்ளளவான 19000 லிட்டர் திரவ ஆக்சிஜன் கிட்டங்கியில் கொள்ளளவு குறைந்து வந்ததினால் தமிழ்நாடு மெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷன் மூலமாக மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள 8 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டு கொள்கலனில் நிரப்பப்பட்டது . மேலும் 6,000 லிட்டர் இன்று மாலைக்குள் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிகிறது. நெல்லை , தூத்துக்குடி ,கன்னியாகுமரி, தென்காசி, ஆகிய மாவட்டங்களில் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்காததினால் அங்கு சிகிச்சை பெற்று நோயாளிகள் அரசு மருத்துவமனைகள் அனுப்பப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

Updated On: 6 May 2021 11:46 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!