/* */

75வது சுதந்திர தினம், 75 பெண் சாதனையாளர்களின் ஓவியம்: 11ம் வகுப்பு மாணவி புதிய சாதனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவி மதனா 8 மாத உழைப்பில் 75 சாதனை படைத்த பெண்மணிகளின் ஓவியங்களை வரைந்துள்ளார்.

HIGHLIGHTS

75வது சுதந்திர தினம், 75 பெண் சாதனையாளர்களின் ஓவியம்: 11ம் வகுப்பு மாணவி புதிய சாதனை
X

பாளையங்கோட்டை சிவராம் கலைக்கூடத்தில் ஓவியம் பயின்று வரும் 11ம் வகுப்பு மாணவி மதனா லட்சுமிகாந்த் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பெண்களை போற்றும் வகையில் 75 சாதனைப் பெண்களின் ஓவியங்களை காப்பித்தூள் கொண்டு வரைந்து சாதனை படைத்துள்ளார். சிவராம் கலைக்கூடத்தின் இளம் சாதனையாளர் மதனா லட்சுமிகாந்த். இவர் குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு.

இந்தியா சுதந்திரம் பெற்று 75வது சுதந்திர தின விழாவை கொண்டாட இருக்கிறது. இதனை முன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டையில் செயல்படும் சிவராம் கலைக்கூடத்தில் ஓவியம் பயின்று வரும் 11ம் வகுப்பு மாணவி மதனா லட்சுமிகாந்த் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். இந்திய திருநாட்டில் அடுப்பூதும் பெண்கள் தொடங்கி விண்வெளியில் சாதனை படைத்த கல்பனா சாவ்லா வரை 75 பெண் சாதனையாளர்களை வீட்டில் பயன்படுத்தும் காப்பி தூளை கொண்டு ஓவியமாக தீட்டி உள்ளார். இது பார்வையாளர்களை கவரும் வண்ணம் இருக்கிறது. இதற்காக 8 மாத காலம் தொடர்ந்து ஓவிய பணிகளை மேற்கொண்டு 75 ஓவியங்களையும் வரைந்து முடித்துள்ளார். குறிப்பாக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தொடங்கி ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் ஓவியங்கள் வரை அசத்தியுள்ளார்.

நெல்லை பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவி மதனா, பென்ஸில் ஷேடிங் ஃபேப்ரிக் கலர்ஸ், அக்ரலிக் கலர், கலர் மற்றும் ஆயில் கலர் இவற்றைக் கொண்டு மிகத் திறமையாக வரையும் ஓவியர் ரவிவர்மாவின் ஓவியத்தையும் அப்படியே வரைவதில் திறமை படைத்தவர். மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு மதனா வரைந்த பாரதியாரின் முழு உருவ ஓவியம் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது என்பது முந்தைய சிறப்பு. இந்த முறை சுதந்திர தின விழாவை முன்னிட்டு வித்தியாசமான முயற்சியாக காப்பித்தூள் பயன்படுத்தி இந்த 75 ஓவியங்களை வரைந்துள்ளார்.

இளம் ரவிவர்மா என்று அழைக்கப்படும். மதனா இதுவரை பங்கேற்ற மாவட்ட, மாநில அளவிலான ஓவிய போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளார். இஸ்ரோ சார்பில் மாவட்டங்களுக்கு இடையேயான நடந்த ஓவிய போட்டிகளில் முதல் பரிசு பெற்றுள்ளார். இளம் வயதில் இத்தனை சாதனைகளை படைத்து வரும் ஓவிய மாணவி மதனா, 76வது சாதனையாளர் என்பதில் ஐயமில்லை!.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு வித்தியாசமான முயற்சியாக காப்பித்தூள் பயன்படுத்தி இந்த 75 ஓவியங்களை வரைந்துள்ளார்.

Updated On: 8 Aug 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  2. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  5. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  7. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  8. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  9. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  10. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்