தனியார் கல்லூரி வளாக நேர்காணலில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு 729 பேர் தேர்வு
பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது
பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்குப் பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து 729 வேலைவாய்ப்புக்கான பணிநியமன ஆணைகள் வழங்கும் ஜுபிளண்ட் விழா.
2021-20222 கல்வி ஆண்டில் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் ஜுபிளண்ட் விழா பெற்றோர்கள்.முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் SCAD கல்வி குழுமங்களின் நிறுவனர் முனைவர் S.கிளிட்டஸ்பாபு, நிர்வாக இயக்குநர் C.அருண்பாபு ஆகியோர் கலந்துகொண்டு, தலைமை உரையாற்றி மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் பாராட்டி, வேலைவாய்ப்பு பணி நியமன ஆணைகளை வழங்கி கெளரவித்தனர்.
முன்னணி நிறுவனங்களில் இருந்து 729 பணிநியமன ஆணைகள் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவ- மாணவியர் பெற்றுள்ளனர். சர்வதேச தரம் வாய்ந்த புகழ்பெற்ற முன்னணி நிறுவங்களின் வேலைவாய்ப்பு வசதிகளை தங்கள் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு பெற்றுத்தந்து, அவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கித் தருவதே பிரான்சிஸ் சேவியர் கல்லூரியின் தலையாய லட்சியமாக உள்ளது. இதற்காக 20 வகையான சிறப்பு தொழில் நிறுவனங்களின் தொழில் நுட்ப ஆய்வகங்கள் கல்லூரி வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த வசதிகளின் மூலம் சிறப்பான பயிற்சிகளை அளித்து நவீன அறிவியல் கருவிகளை, பன்னாட்டு நிறுவனங்களின் உதவியுடன் மாணவர்கள் உருவாக்கியதனால் இந்த வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். வேலைவாய்ப்புப் பெற்ற மாணவர்களின் ஆண்டு வருமானம் 3.5 லட்சம் முதல் 16 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி அகில இந்திய தொழில்நுட்ப அடல்தர வரிசைப்பட்டியலில் (ARIIA Ranking 2021) எக்சலண்ட் பாண்ட் (Excellent Band) இடத்தைப் பெற்றுள்ளது. இந்திய கல்வி அமைச்சகத்தின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான (MIC) தரவரிசைப்பட்டியலில் அதிகபட்ச இடமான நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது.
பன்னாட்டு நிறுவனங்களுடன் சிறப்பாக இணைந்து பணியாற்றிதற்காக அகில இந்திய தொழில்நுட்பகழகம் பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து நடத்திய சர்வேயில் பிளாட்டினம் அந்தஸ்தும் பெற்றுள்ளது. மேலும் கல்லூரிக்குள் இயங்கிவரும் தொழில் நிறுவனங்களும் தேவையான பயிற்சி அளித்து மாணவர்களை சிறப்பாக உருவாக்கிவருகிறார்கள். சுயதொழில்களை ஊக்குவிக்கும் எம்.எஸ்.எம்.இ. பிசினஸ் இன்குபேஷன் (MSME Business Incubation) பிரிவும் அரசு நிதி உதவியுடன் கல்லூரியில் செயல்படுகிறது.
மேற்கண்ட தொடர்முயற்சிகளால், தேசிய அளவிலான TCS தேர்வில் கிராமப்புற மாணவர்களுக்கும், பயிற்சி அளித்து வெற்றிபெற வைத்து பிரான்சிஸ் சேவியர்பொறியியல் கல்லூரி புரட்சிகரமானசாதனையை நிகழ்த்தியுள்ளது. இறுதியாண்டுபயிலும் 274 மாணவர்கள் ஏற்கனவே வேலைவாய்ப்பு பெற்று, சம்பளத்துடன் தேர்வாகியுள்ள நிறுவனங்களில் பயிற்சி பெற்று வருகிறார்கள் என்பது கூடுதல்சிறப்பு. கல்லூரி வளாகத்திலேயே பன்னாட்டு நிறுவனங்களின் பணிபுரியும் பொறியாளர்களை கொண்டு பாடங்கள் மற்றும் பயிற்சிவகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்களின் கிடைக்கும் அனுபவங்கள்கல்லூரியிலேயே கிடைக்கிறது.
மேலும், மாணவர்களுக்கு இன்டென்ஷிப் வாய்ப்புகள் சம்பளத்துடன் கல்லூரியின் மூலம் வழங்கப்படுவதால் படித்துக்கொண்டே மாத ஊதியம் பெறும் திட்டம் வெளிநாடுகளுக்கு இணையாக திருநெல்வேலி எப்.எக்ஸ். கல்லூரியில் வழங்கப்படுவது சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது. ஆசிரியர்கள் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான பயிற்சிகளை தினசரி பாடத்திட்டங்களுடன் நடத்திவருவதால் இந்தஆண்டு 729 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. 122 பன்னாட்டு நிறுவனங்கள் கல்லூரிக்கே வருகைதந்து வளாகத் தேர்வு நடத்தி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கியுள்ளார்கள். தொழில் நிறுவனங்களைச் சார்ந்த வல்லுனர்களுக்கிடையான கலந்துரையாடல் மூலம் மாணவர்களின் தொழில்நுட்ப சந்தேகங்களும் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படுவதால், வேலைவாய்ப்பு பெற்றுள்ள மாணவர்கள் வெகுவிரைவில் வெளிநாடு செல்வதற்க்கான வாய்ப்பும் இருக்கிறது. கிராமப்புற மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பினை வழங்கி, அவர்களின் எதிர்காலத்தை வளமாக்கிய கல்லூரி நிர்வாகத்திற்கு விழாவில் கலந்துகொண்ட பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
படிக்கும்போதே, சிறந்த பயிற்சியின் மூலம் அதிக சம்பளம் பெற்றுதரும் இந்த அரிய திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் கல்லூரியின் பொதுமேலாளர் (வளர்ச்சி) முனைவர் கே.ஜெயக்குமார், பொதுமேலாளர் (நிர்வாகம்) எஸ்.கிருஷ்ணகுமார், முதல்வர் முனைவர் வி.வேல்முருகன், வேலைவாய்ப்புத்துறை டீன் முனைவர் ஏ.ஞானசரவணன், பயிற்சித்துறை டீன் முனைவர் எஸ்.பாலாஜி, தொழில் முனைவோர் து இயக்குநர் முனைவர் லூர்டஸ் பூபாலராயன், கல்விசார் துறைப் பேராசிரியர் முனைவர் எல்.ஆர்.பிரியா, வளாக மேலாளர் ஜெ.சகாரியா கேபிரியேல், பேராசிரியர் முனைவர் கரோலின், பேராசிரியர் முனைவர் ஜெ.ஜாஸ்பெர் ஞானச்சந்திரன், பேராசிரியர் ஜெ.டேவிட்ஐலிங், முக்கிய நிர்வாகிகள், துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரையும் கல்லூரி நிறுவனர் முனைவர் எஸ்.கிளிட்டஸ்பாபு, நிர்வாக இயக்குநர் சி.அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu