"கழிவுநீர் பிரச்சனையை சீர்செய்யுங்கள்"-முதல்வருக்கு 5ம் வகுப்பு மாணவி கடிதம்

நெல்லை மாவட்டத்தில் தான் வசிக்கும் தெருவில் ஏற்படும் கழிவுநீர் பிரச்னையை சரிசெய்ய கோரி முதல்வருக்கு 5ம் வகுப்பு மாணவி கடிதம் அனுப்பியுள்ளார்.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஹாமிம்புரம் 3வது தெருவைச் சேர்ந்த ஷாபி ரதமத்துல்லாவின் மகள் ஆகிலா. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்.
சிறுமி ஆமிலா தான் வசிக்கும் தெருவில் ஏற்பட்டுள்ள கழிவுநீர் பிரச்னை குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினக்கு கடிதம் அனுப்பியுள்ளார்
மேலப்பாளையம் ஹாமிம்புரம் பகுதியில் உள்ள தெருக்களில் நீண்ட நாட்களாக கழிவுநீர் பிரச்னை இருந்து வருகிறது. இங்கு பாதாள சாக்கடை வசதி இல்லாத்தால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் போதிய வடிகால் வசதி இல்லாமல் ஆங்காங்கே தேங்கி கிடந்து சுகாதார சீர்கேடு ஏற்படும் இதுதொடர்பாக இப்பகுதி மக்கள் பலவேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர்
அதிகாரிகளிடம் மனு அளித்தும் பிரச்னை தீரவில்லை. தற்போது புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளை தெரியப்படுத்தினால் 100 நாட்களுக்குள் சரிசெய்யப்படும் என்று அறிவித்துள்ளதோடு அதற்கென தனி ஐஏஎஸ் அதிகாரியையும் நியமித்துள்ளார்
எனவே அந்த நம்பிக்கையில் சிறுமி ஆமிலா தனது தெரு பிரச்னை குறித்து கடிதம் எழுதி அதை தபால் மூலம் முதல்வருக்கு அனுப்பியுள்ளார் சிறுமி ஆமிலா தனது கடித்த்தில், தங்கள் பகுதியில் கழிவு நீர் மற்றும் மனித கழிவுகள் ஓடைகள் வழியாக கன்னிமார் தளத்தில் கலப்பதால் துர்நாற்றம் வீசுதோடு நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.
தினம் தினம் அவதிபட்டு வருகிறோம். எனவே எங்கள் பகுதியில் கழிவுநீர் பிரச்னையை சரிசெய்ய வேண்டும் என் று மனுவில் கோரியுள்ளார். எது நடந்தாலும் நமக்கென்ன என்று ஒதுங்கும் இளைஞர்கள் பெரியவர்களுக்கு மத்தியில் தனது தெரு மக்களின் நலனுக்காக தனி ஆளாக போராடும் சிறுமி ஆமிலாவின் செயல் பொதுமக்களிடம் பாராட்டை பெற்றுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu