நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் 400 மனுக்கள்

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் 400 மனுக்கள்
X

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தலைமையில் இன்று (18.07.2022) நடை பெற்றது.

இக்கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து மாற்றுத்திறனாளிகள் உதவித்தெகை, முதிர்கன்னி உதவித்தொகை, விபத்துமரண உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மற்றும் பட்டா மாறுதல் வேலைவாய்ப்பு, மற்றும் குடிநீர், சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான சுமார் 400க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து மனுக்களை பரிசீலனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.

மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவுகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு அறிவுறுத்தினார்.

மேலும், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளிகளை இருக்கையில் அமரவைத்து அவர்களது இருக்கைக்கு சென்று அவர்களது கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.

முன்னதாக மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சரணாலயம் திறந்த நிலைப் புகழிடம் மற்றும் வரவேற்பு இல்லத்தில் உள்ள 18 பெண் குழந்தைகளுக்கு CSC COMPUTER மையத்தின் மூலமாக DIPLOMA IN MS- OFFICE (DMO) மூன்று மாத கால பயிற்சி வழங்கப்பட்டு, அதற்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.ஜெயஸ்ரீ, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் குமாரதாஸ், சமூக நல அலுவலர் சரஸ்வதி மற்றும் அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!