நெல்லை அருகே மது அருந்த பணம் கேட்டு அரிவாளை காட்டி மிரட்டிய 3 பேர் கைது

நெல்லை அருகே மது அருந்த பணம் கேட்டு அரிவாளை காட்டி மிரட்டிய 3 பேர் கைது
X
மேலப்பாளையத்தில் ஆட்டோ ஓட்டுநரிடம் மது அருந்த பணம் கேட்டு அரிவாளை காட்டி மிரட்டிய 3 பேர் கைது.

நெல்லை மாநகரம் மேலப்பாளையம் குறிச்சி சந்திப்பு அருகே ஆட்டோ நிறுத்தத்தில் கடந்த 04-09-2021 ம் தேதியன்று ஆட்டோ ஓட்டுநரான மேலநத்ததை சேர்ந்த கண்ணன் என்பவர் பயணிகளுக்காக காத்திருந்தார்.

அப்போது அங்கு வந்த மேலப்பாளையம் குறிச்சியை சேர்ந்த சதீஷ், இசக்கியப்பன், நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சேர்ந்த முத்துமாயன் ஆகிய மூவரும் சேர்ந்து மது குடிக்க பணம் கேட்டு தரமறுத்த ஆட்டோ ஓட்டுனர் கண்ணனை தகாத வார்த்தையால் திட்டி கையில் வைத்திருந்த அரிவாளை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆட்டோ ஓட்டுனர் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் சாமி மற்றும் போலீசார் குற்றவாளிகளான மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

Tags

Next Story
ai in future agriculture