நெல்லையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் 2-வது நாள் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் 2-வது நாள் ஆர்ப்பாட்டம்
X

நெல்லையில் இன்று இரண்டாவது நாளாக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லைில் அனைத்து தொழிற் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் இரண்டாவது நாளாக கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.

விலைவாசி உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்ததை தடுத்து நிறுத்துவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து அகில இந்திய அளவில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று மற்றும் இன்று ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து நெல்லையில் நேற்று காலை முதல் தொழிற்சங்கத்தினர் போராட்டம் தொடங்கிய நிலையில் இன்று பெரும்பாலான பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இருந்தபோதிலும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச, சி.ஐ.டி.யு, உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மத்திய அரசு தொழிலாளர் விரோத போக்கை கைவிடாவிட்டால் மீண்டும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!