தமிழக அரசின் ஓராண்டை சிறப்பிக்கும் வகையில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா
மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் தலைமையில் துணைமேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் ஆகியோர் முன்னிலையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்று ஓராண்டு காலம் முடிவுற்ற நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி நான்கு மண்டல பகுதிகளில் 1000 மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிடப்பட்டது.
இந்நிலையில் பாளையங்கோட்டை மண்டலம் மகாராஜாநகர் உழவர் சந்தை அருகில் உள்ள போக்குவரத்து பூங்காவில் மரக்கன்றுகள் நடும் பணிகளை மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி, துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் ஆகியோர் முன்னிலையில் மரக்கன்றுகளை நட்டனர்.
பின்னர் மேயர் பி.எம்.சரவணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருநெல்வேலி மாநகராட்சியானது, ரூ.5.11 கோடி மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா அமைத்தல், ரூ.5.60 கோடி மதிப்பீட்டில் அறிவு சார் மையம் அமைத்தல், ரூ.4.05 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கான வாகனங்கள் கொள்முதல் செய்தல், ரூ.15.51 கோடி மதிப்பீட்டில் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணிகள், ரூ.11.99 கோடி மதிப்பீட்டில் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையத்தில் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைத்தல், ரூ.13.22 கோடி மதிப்பீட்டில் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையத்தினை நவீனபடுத்துதல், ரூ.13.28 கோடி மதிப்பீட்டில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணிகள், ரூ.2.28 கோடி மதிப்பீட்டில் மிதிவண்டி பாதை அமைத்தல், ரூ.11.78 கோடி மதிப்பீட்டில் பூங்கா பணிகள் செய்தல், ரூ.11.51 கோடி மதிப்பீட்டில் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையம் முனையம் கட்டிடம் நவீனப்படுத்துதல், ரூ.4.98 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு பேருந்து நிறுத்தம் அமைத்தல். ரூ.10.38 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மின் விளக்குகள் அமைத்தல் போன்ற திட்டப்பணிகள் சுமார் ரூ.110 கோடிக்கு செயல்படுத்தி சாதனை படைத்துள்ளது.
இளைஞர்கள் மற்றும் அனைத்து வயதினரிடத்திலும் உடற்பயிற்சி பழக்கத்தினை ஊக்குவிக்கும் வகையிலும், உடலநலத்திற்கு முக்கியத்துவம் அளித்து உடற்பயிற்சி வாயிலாக உடல் வலிமை மற்றும் இளைஞர்களை விளையாட்டு துறையில் அதிக அளவில் பங்கேற்க செய்ய தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்தும் விதமாக வெளிப்புற உடற்பயிற்சி உபகரணங்களை விநியோகம் செய்து பொருத்தும் பணிகளை மேற்கொண்டு நான்கு மண்டலங்களில் (திருநெல்வேலி, தச்சைநல்லூர், மேலப்பாளையம், பாளையங்கோட்டை) 18 இடங்களில் ரூ.27.00 இலட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டு முடிவுறும் தருவாயில் உள்ளது.
தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்த விளக்கப்படங்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், பெரிய அகன்ற ஒளித்திரைகள் அமைக்கப்பட்டு பாளை பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் நெல்லை சந்திப்பு த.மு.சாலை, போன்ற இடங்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில், மாமன்ற உறுப்பினர்கள் பி.வில்சன்மணிதுரை, பா.சீதா, மாநகர பெறியாளர் (பொ) என்.நாராயணன், உதவி ஆணையாளர் ஜகாங்கீர் பாஷா, உதவி செயற்பொறியாளர் சாந்தி, உதவி பொறியாளர் சங்கரநாராணயன், இளநிலை பொறியாளர் தன்ராஜ், மற்றும் சுகாதார அலுவலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர் சங்கர நாராணயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu