ராஜகோபால சுவாமி கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

ராஜகோபால சுவாமி கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
X

பாளையங்கோட்டை அருள்மிகு இராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது.

பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது 500 ஆண்டுகள் பழைமையான திருக்கோவில் அருள்மிகு இராஜகோபால சுவாமி கோவில். சிற்பக்கலைக்கு பெயர் பெற்ற இத்திருக்கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. நேற்று அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி நடைபெற்று இரவில் சேனை முதலியாா் புறப்பாடு நடைபெற்றது. இன்று காலை சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலர் இராஜ அலங்காரத்தில் காட்சி கொடுத்தாா்.

கருடக்கொடியானது சக்கரத்தாழ்வாருடன் சீவிலியில் 4 ரத வீதிகளில் வலம் வந்தது. தொடா்ந்து கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. பின்னா் 16 வகையான வாசனை பொருட்கள் கொண்டு திருமஞ்சனம் நடைபெற்று கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. உற்சவருக்கு நட்சத்திர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். கொடிமரத்திற்கு விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத இராஜகோபாலா் பல்வேறு வாகனங்களில் வீதி உலா புறப்பாடு நடக்கிறது.

Tags

Next Story