/* */

நெல்லை: அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம் என்று அமைச்சர் ராமச்சந்திரன் எச்சரிக்கை

அங்கீகாரம் இல்லாத மனைகளில் வசிப்பவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதில் சிக்கல் நிலவி வருகிறது என்று அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

நெல்லை: அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம்  என்று அமைச்சர் ராமச்சந்திரன் எச்சரிக்கை
X

பொதுமக்கள் அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம். அங்கீகாரம் இல்லாத மனைகளில் வசிப்பவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதில் சிக்கல் நிலவி வருகிறது என வருவாய், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்தார்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தில் தமிழக வருவாய், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பங்கேற்று ஆலோசனை நடத்தினார்.

பின்னர், வருவாய் துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பல ஆண்டுகாலமாக ஜாதி சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்த நெல்லை மாவட்டம் தருவையை சேர்ந்த காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் 144 பேருக்கு ஜாதி சான்றிதழ், 751 நபர்களுக்கு சமுதாய பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ரூ. 1000 உதவித்தொகை வழங்கும் திட்டம், 550 நபர்களுக்கு சுமார் 1.29 கோடி மதிப்பிலான வீட்டுமனை பட்டா, 49 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்குதல் என மொத்தம் ரூ. 2.32 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர்.

தொடர்ந்து, இலவச வீட்டுமனை பட்டா வழங்குதல், அரசு திட்டங்களுக்கு தேவையான நிலம் கையகப்படுத்துதல் பணி, பொதுமக்களுக்கு தேவையான சான்றிதழ் வழங்கும் பணி உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் ராமச்சந்திரன் மேலும் கூறியதாவது: நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் 43,803 மனுக்கள் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்துக்கு வந்துள்ளது. அதில் 13,462 மனுக்களுக்கு தீர்வு காாணப்பட்டுள்ளது.

பட்டா வழங்குதல் ,சர்வே செய்வதில் இருக்கும் தாமதத்தை உடனடியாக நிவர்த்தி செய்யவும் உட்கோட்ட அளவீடு பிரச்னை களை வாரம் ஒருமுறை குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் உழவர் பாதுகாப்பு திட்டத்தை விரிவுபடுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உழவர் பாதுகாப்பு திட்டத்திற்கான பலன்களை பெற நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளது. புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டும் அதற்கான தாலுகா வருவாய் கோட்டங்கள் பிரிக்கப்படாமல் இருக்கிறது. அதற்கான உத்தரவுகளை விரைவில் முதல்வர் வெளியிடுவார்.

வி.ஏ.ஓ உள்ளிட்ட வருவாய் துறையின் காலிபணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சியிடம் கேட்டுள்ளோம். தமிழகம் முழுதும் 3000 வருவாய் உதவியாளர் பணியிடங்கள் கொரோனா கட்டுப்பாடு காரணமாக நிரப்பப்படாமல் உள்ளது. விரைவில் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சர்வே செய்ய படாத இடங்களில் நீதிமன்ற ஆணையை பின்பற்றி லைசன்ஸ் சர்வேயர் மூலம் அளவீடு செய்து மனு அளித்தால் 15 நாட்களுக்கு அந்த பணிகளை முடிக்க அறிவுறுத்தபட்டுள்ளது. இலவச பட்டாக்கள் பெற்ற பலர் வீடுகள் கட்டபடாமல் இருப்பதால் அந்த பிரச்னையை தவிர்க்க பட்டா வழங்கும் போது சர்வே செய்து அவர்களுக்கான இடங்களை லே அவுட் செய்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவான அன்றே அந்த இடத்துக்கான பட்டா மாறுதலும் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மனை அங்கீகாரம் இல்லாத இடங்களை வாங்கியவர்களுக்கு தகுந்த அடிப்படை உதவிகளை செய்ய முடியாத நிலை உள்ளது. மனை அங்கீகார அனுமதி இல்லாத இடங்களை பொதுமக்கள் வாங்கவேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். அரசுக்கு தேவையான நிலம் கையகபடுத்துவதில் தாமதம் செய்யக்கூடாது என உத்தரவிடபட்டுள்ளது. அரசுக்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் போது உள்ள பிரச்னைகளை நிவர்த்தி செய்ய தளர்வுகளுடனான சந்தை விலையை வழங்கி பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

Updated On: 19 July 2021 11:07 AM GMT

Related News