அதிமுக வேட்பாளர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு
X

பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெரால்டு கொக்கிரகுளம் பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

பாளையங்கோட்டை அதிமுக வேட்பாளர் ஜெரால்டு இன்று காலை கொக்கிரகுளம், குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது குறுகிய சந்து உள்ள பகுதிகள் முழுவதும் வேட்பாளர் மோட்டார் பைக்கில் சென்று வாக்கு சேகரித்தார். வேட்பாளருக்கு பெண்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து திருநெல்வேலி ஜங்ஷன் மீனாட்சிபுரத்தில் உள்ள பொது மக்களை சந்தித்து அதிமுக வேட்பாளர் ஜெரால்டு வாக்கு கேட்க சென்றார். அப்போது அப்பகுதியை சேர்ந்த அதிமுக மாவட்ட மகளிரணி துணை செயலாளர் , முன்னாள் மேயர் புவனேஸ்வரி வேட்பாளருக்கு ஆளுயர மாலை அணிவித்து வரவேற்பு அளித்தார். தொடர்ந்து வேட்பாளருடன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்