திருநெல்வேலி ஜி.ஹச். -ல் கிருமி நாசினி தொளிக்கும் பணிதீவிரம்
கொரோனா இரண்டாவது அலை உருவாகாமல் தடுக்கு மாநில அரசுகள், கொரோனா விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி மாநில முதல்வர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
அதன்படி தமிழகம் முழுவதும், வெளியில் வரும் பொதுக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என கடும் கட்டுப்பாடு பின்பற்ற வருகிறது.
கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க திருநெல்வேலி அரசு மருத்துவமனை வளாகம் வெளிப்புறம் முழுவதும் கிருமி நாசினி மருந்து தொளிக்க மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவிட்டார்.
அதன்படி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நெல்லை மாநகர நல அலுவலர் டாக்டர். சரோஜா ஆலோசனை படி பாளை உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், சுகாதார அலுவலர் அரசகுமார் ஆகியோர் மேற்பார்வையில்,
சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் பாளை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் வெளிப்புற பகுதிகளில் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க கிருமி நாசினி தொடர்ந்து தெளிக்கபட்டது. மேலும் கடைகளுக்கு முன்பு சமூக இடைவெளி விட வட்டம் போடப்பட்டது. முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu