பாளையங்கோட்டையில் கொரனா நிவாரணம் வழங்கும் பணி .

பாளையங்கோட்டையில் கொரனா நிவாரணம் வழங்கும் பணி .
X
முழு ஊரடங்கு நேரத்திலும்...

முழு ஊரடங்கு நேரத்திலும் பாளையங்கோட்டை பகுதியில் டோக்கன் பெற்றவர்களுக்கு 2000 கொரனா நிவாரணம் வழங்கும் பணி நடைபெற்றது.

பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை வாங்கி சென்றனர் தமிழகம் முழுவதும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரனா நிவாரண நிதி முதற்கட்டமாக 2000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று முதல் நிவாரணம் வழங்கும் பணிகள் தொடங்கியது.

தொடர்ந்நு இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்ற போதிலும் பொது மக்களுக்கு நிவாரண தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னதாக, இன்று நிவாரணம் பெறுபவர்களுக்கு கடை ஊழியர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டிருந்தது அவர்கள் இன்று தங்கள் பகுதிகளில் ரேஷன் கடைகளுக்கு சென்று தங்களுக்கான 2000 நிவாரண தொகையை பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை செந்தில் நகர் பகுதியில் இயங்கி வரும் நியாய விலைக் கடையில் டோக்கன் பெற்றவர்களுக்கு நிவாரண தொகை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

இங்கு மொத்தம் 200 டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது இதையடுத்து டோக்கனை பெற்று கொண்டவர்கள் இன்று காலை முதல் கடை முன்பு சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

அவர்களுக்கு தற்போது 2000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது முழு ஊரடங்கு என்ற போதிலும் நிவாரணத்தொகை வழங்கப்படுவதால் பொதுமக்கள் ஆர்வமுடன் இன்று தங்களுக்கான தொகையை பெற்று செல்கின்றனர்.

இதேபோல் நெல்லை மாவட்டம் முழுதும் உள்ள நியாய விலைக் கடைகளிலும் டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு இன்று நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது நெல்லை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 796 நியாய விலைக் கடைகளில் சுமார் 4 லட்சத்து 60 ஆயிரம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கும் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story