நெல்லையில் உயிரிழந்ததாக கூறப்படும் தகவல் தவறானது மாவட்ட ஆட்சியர் தகவல்
நெல்லையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 13 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் தகவல் தவறானது என்றும் பற்றாக்குறையை சமாளிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரனா இரண்டாம் கட்ட அலை தனது கோரமுகத்தை காட்டிவருகிறது நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமலும் போதிய சிகிச்சை கிடைக்காமலும் பல்வேறு நோயாளிகள் தினம் தினம் செத்து மடியும் அவலம் நீடிக்கிறது.
ஆனால் அரசு சார்பில் நாள்தோறும் கொரனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே கணக்கு காட்டப்படுகிறது அந்தவகையில் நெல்லை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக கொரனாவால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் வெறும் மூன்று பேர் நான்கு பேர் மட்டுமே உயிரிழப்பதாக கணக்கு காட்டி வருகின்றனர்.
குறிப்பாக கடந்த சில தினங்களாக நெல்லை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் சராசரியாக 40 பேர் வரை கொரனா நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது இந்நிலையில் வி எம் சத்திரம் பகுதியிலுள்ள மின்சார இடுகாட்டில் பத்துக்கும் மேற்பட்ட கொரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது
நெல்லை அரசு கல்லூரி மருத்துவமனையில் தற்போது சுமார் 900 பேர் கொரனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் நெல்லை மட்டுமல்லாமல் தூத்துக்குடி கன்னியாகுமரி தென்காசி உள்ளிட்ட அண்டை மாவட்டங்கள் சேர்ந்த நோயாளிகளும் ஏராளமானோர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவதால் தினசரி ஆக்ஸிஜன் தேவை 7000 முதல் 9000 லிட்டர் வரை அதிகரித்துள்ளது இங்கு நிலவிவரும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க மகேந்திரகிரி இஸ்ரோ நிறுவனத்திடமிருந்து நெல்லை அரசு மருத்துவமனை இதுவரை நான்கு கட்டங்களாக சுமார் 19 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜனை பெற்றுள்ளது.
அதேபோல் தஞ்சாவூரிலிருந்து 3000 லிட்டர் ஆக்சிஜன் சில தினங்களுக்கு முன்பு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இங்கு கொண்டுவரப்படும் ஆக்சிஜன் ஒரே நாளில் தீர்த்து விடுகிறது அந்தவகையில் நேற்று மாலை ஆக்சிசன் தீர்ந்துவிட்டதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
பிறகு ஒரு வழியாக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மூலம் சிகிச்சையை சமாளித்து வந்தனர் இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் உலகில் முதல்முறையாக உற்பத்தி செய்யப்பட்ட சுமார் 5,000 லிட்டர் மருத்துவ ஆக்ஸிஜன் இன்று நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu