சலவை தொழிலாளர்களுக்கு புதிய சலவை மைய கட்டிடம் : நெல்லை ஆட்சியர் அடிக்கல் நாட்டினார்

சலவை தொழிலாளர்களுக்கு புதிய சலவை மைய கட்டிடம் : நெல்லை ஆட்சியர் அடிக்கல் நாட்டினார்
X
நெல்லையில் சலவைத் தொழிலாளர்களுக்கு 4 கோடியே 20 லட்சம் மதிப்பில் சலவை மையத்திற்கான கட்டிட அடிக்கல் நாட்டு விழா. மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

நெல்லையில் சலவைத் தொழிலாளர்களுக்கு 4 கோடியே 20 லட்சம் மதிப்பில் சலவை மையத்திற்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அடிக்கல் நாட்டினார்.

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.இதன் ஒரு பகுதியாக வண்ணாரப்பேட்டை மற்றும் கருப்பந்துறை பகுதிகளில் சலவை தொழிலாளர்களுக்காக ரூ. 4.20 கோடி மதிப்பில் கட்டப்பட இருக்கும் சலவை மையத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கலந்து கொண்டு சலவை மையத்திற்கான அடிக்கல் நாட்டினார். விழாவில் மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!