நெல்லை-அரசு அருங்காட்சியகத்தில் காணி மக்களின் இசைக்கருவி சிறப்பு கண்காட்சி

நெல்லை-அரசு அருங்காட்சியகத்தில் காணி மக்களின் இசைக்கருவி சிறப்பு கண்காட்சி
X
நெல்லை மாவட்ட காணி பழங்குடியினர் பயன்படுத்தும் கோக்ரா இசைக்கருவியை இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்தனர்.

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் காணி பழங்குடி மக்களின் "கோக்ரா" இசைக்கருவி என்கிற அரும்பொருள் காட்சிபடுத்தப் பட்டுள்ளது. கண்காட்சியை அருங்காட்சியக காப்பாளர் சத்தியவள்ளி துவக்கி வைத்தார்.

நெல்லை மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் ஏராளமான அரும் பொருட்கள் உள்ளன. ஒவ்வொரு பொருள்களும் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்கவை. அத்துணை சிறப்பு மிக்க பொருள்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் விதமாக இதுபோன்று மாதம் ஒரு சிறப்பு கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் அருங்காட்சியகத்தின் இருப்பில் உள்ள அரும் பொருட்கள் ஏதேனும் ஒன்றினை காட்சிப்படுத்தி அப்பொருளை பற்றிய விளக்கப்பட்டிருக்கும். ஒரு மாதம் முழுவதும் இந்தப் பொருள் பொதுமக்களின் பார்வைக்காக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும்.

இன்று துவங்கப்பட்ட இக்கண்காட்சியில் இடம்பெற்ற அரும்பொருள் நெல்லை மாவட்ட பழங்குடி மக்களான காணி பழங்குடியினர் பயன்படுத்தும் "கோக்ரா" இசைக்கருவி பற்றி இன்றைய தலைமுறையினர் அனைவருக்கும் தெரிவிப்பதே இக்கண்காட்சியில் நோக்கமாகும். இக்கண்காட்சியை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் என பலர் பார்வையிட்டனர்.

Tags

Next Story
business ai microsoft