நெல்லை மரக்கடையில் தீ விபத்து

நெல்லை மரக்கடையில் தீ விபத்து
X
நெல்லை மரக்கடையில் திடீரென தீவிபத்து. இதில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் லட்சம் மதிப்புள்ள மரக்கட்டைகள் எரிந்தன.

பாளையங்கோட்டை மரக் கடையில் நேரிட்ட தீ விபத்திவ் இரு சக்கர வாகனங்கள், மரங்கள் எரிந்து சேதமடைந்தன

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் உள்ள மரக்கடையில் இரவில் திடீரென தீ பிடித்துள்ளது. இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து இரண்டு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது தீ வேகமாக பரவியது. தீயணைப்பு படை வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் 3 இருசக்கர வாகனங்கள், 2 லட்ச ரூபாய் மதிப்பிலான மரக்கட்டைகள் எரிந்து நாசமானது. இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
why is ai important to the future