நெல்லை-பழமை வாய்ந்த கலாச்சார கட்டிடங்களை புனரமைக்க அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு.
பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள ஊமத்துரை சிறைப்படுத்தப்பட்ட அறை, கலையரங்கு கட்டுமான பணிகள், பல்வேறு தொன்மையான சிலைகள் மற்றும் இளைய தலைமுறையினருக்கு சுலபமாக நமது கலாச்சாரத்தை தெரிந்து கொள்வதற்காக வைக்கப்பட்டுள்ள மின்னணு செயல்பாடுகள் ஆகியவற்றை பேரவைத்தலைவர் அப்பாவு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் பார்வையிட்டார்கள். அப்போது அரசு அருங் காட் சியக காப்பாளர் சத்திய வெள்ளி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததாவது:
திருநெல்வேலி மாநகராட்சி சீர்மிகு நகர் திட்டப்பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் பழமை மாறாமல் பண்பாடு, கலாசாரம் பேணிக் காப்பதற்கான நிதியை பயன்படுத்தி பாளையங்கோட்டை சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த கலாசார கட்டி டங்களை புனரமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பாளையங்கோட்டையில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட மேடை காவல் நிலையம் மூதாதையர்களின் நினைவுச் சின்னமாகும். இதனை மாவட்ட நிர்வாகம் பழமை மாறாமல், மரபுச் சின்னமாக இப்பகுதி மக்கள் தங்களது ஊரின் தொன்மையை அறிந்து கொள்வதற்காகவும், இப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தொன்மை மாறாமல் புதுப்பித்து அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்வதற்காகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பாளையங்கோட்டையின் முக்கிய அடையாளம் மட்டுமல்ல தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய மரபுச்சின்னங்களின் முக்கியமான பட்டியலில் இதனை கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu