சீவலப்பேரி கொலை வழக்கில்: மூன்று பேர் கைது
சீவலப்பேரி கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று நபர்கள் கைது.
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீவலப்பேரி சுடலை மாடசாமி கோவில் பூசாரி சிதம்பரம் என்ற துரை(41) என்பவரை கோவிலில் கடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் முன் விரோதம் காரணமாக, கடந்த 18.04.2021 அன்று மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் IPS உத்தரவுபடி தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்யும்படி உத்தரவிட்டார்.
இதனடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து கொலையில் ஈடுபட்ட ஏழு எதிரிகளை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று கொலையில் ஈடுபட்ட மேலும் மூன்று எதிரிகளான சீவலப்பேரி தேரடி தெருவைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் இளங்காமணி(42), சீவலப்பேரி காலனி தெருவைச் சேர்ந்த மணி என்பவரது மகன் சேகர் (40),மற்றும் சீவலப்பேரி செல்லத்துரை என்பவரது மகன் பேச்சிகுட்டி (42) ஆகிய மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu