தூய்மை பணியாளர்களிடமிருந்து பிரச்சாரம் தொடங்கிய வேட்பாளர்

தூய்மை பணியாளர்களிடமிருந்து பிரச்சாரம் தொடங்கிய வேட்பாளர்
X

தேர்தல் களத்தில் அனைத்து வேட்பாளர்களும் வாக்கு சேகரிக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வரும் நிலையில் அமமுக எஸ்.டி.பி.ஐ கூட்டணியின் பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளர் முஹம்மது முபாரக் தூய்மைக்கு முன்னுரிமை அளித்து தூய்மை பணியாளர்களிடமிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.

பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளர் முஹம்மது முபாரக் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். இன்று காலை முதலே தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். மேலப்பாளையம் நேதாஜி சாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களிடம் வாக்கு சேகரித்த அவர் உழவர் சந்தை, சந்தை ரவுண்டானா, அம்பை சாலை பகுதிகளில் நடந்தே சென்று வாக்குகளை சேகரித்தார்.

வாக்கு சேகரிப்பின் போது நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் கனி, துணை தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, பொதுச் செயலாளர் ஹயாத் முஹம்மது, புறநகர் மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான், மாவட்ட செயலாளர் புஹாரி சேட், தொழிற்சங்க மாவட்ட தலைவர் சலீம்தீன், செயலாளர் செய்யது மைதீன், தொகுதி செயலாளர் பாளை சிந்தா, தொகுதி நிர்வாகிகள் ஜாபர் இமாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!