வாக்காளர் விழிப்புணர்வு , நுகர்வோர் உரிமை நாள் விழா

வாக்காளர் விழிப்புணர்வு , நுகர்வோர் உரிமை நாள் விழா
X

பாளையங்கோட்டையில் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் உலக நுகர்வோர் உரிமை நாள் விழா நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சாராள் தக்கர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு ( பெட்காட்) இணைந்து உலக நுகர்வோர் உரிமைதினம் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு விழா பாளையங்கோட்டை சாராள் டக்கர் ஆசிரியர் நிறுவனத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு துணை வட்டாட்சியர் பழனி தலைமை தாங்கினார். சாராள் தக்கர் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஜெயமேரி வரவேற்றார்.

நுகர்வோர் உரிமை கடமை 100 சதவீதம் வாக்களிப்பதின்,நன்மை குறித்து கணபதி சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார்.முதுநிலை வருவாய் ஆய்வாளர் மாரிதுரை வாக்குப்பதிவு எந்திரம் செயல்முறை விளக்கம் செய்து காட்டினார். 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. நுகர்வோர் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.விழாவில் சாராள் தக்கர் ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் மாரியப்பன் ஸ்ரீ குமரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பெட் காட் மாநகரச் செயலாளர் முத்துசாமி நன்றி கூறினார்.

Tags

Next Story
is ai the future of computer science