அரசமர விநாயகருக்கு கும்பாபிஷேகம்

அரசமர விநாயகருக்கு கும்பாபிஷேகம்
X

பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் உள்ள அரசமர விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் உள்ள செல்வவிநாயகர் கோயிலில் அரசமரத்தில் தானாகவே தோன்றிய விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக பூஜை பணிகளை கேடிசி நகர் சிவன்பிள்ளை மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். தொடர்ந்து சிவப்பிரகாசம் நற்பணி மன்ற செயலாளர் கணபதி சுப்ரமணியன், பக்தி சொற்பொழிவு நிகழ்த்தினார். சமுக ஆர்வலர் முத்துசாமி, வாழ்த்துரை வழங்கினார்.

இதில் வரும் ஏப்ரல் 6 சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்கவும், மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டோர் அரசு வழங்கியுள்ள புது நெறிமுறைகளை பின்பற்றி வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து மாதர் சங்கத்தினர் நடத்திய பக்தி பாராயணம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை செல்வவிநாயகர் கோயில் பொறுப்பாளர் சிவன் பிள்ளை மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!