தொகுதி மக்களுக்காக ஓடி ஆடி உழைப்பேன்- அதிமுக வேட்பாளர்

தொகுதி மக்களுக்காக ஓடி ஆடி உழைப்பேன்- அதிமுக வேட்பாளர்
X

பாளையங்கோட்டை தொகுதி மக்களுக்காக ஓடி ஆடி உழைப்பேன் என வேட்புமனு தாக்கலுக்கு பிறகு அதிமுக வேட்பாளர் ஜெரால்டு கூறினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.6ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இன்று இரண்டாவது நாளாக வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் நாளில் ஐந்து தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் மூன்று பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தனர். இரண்டாவது நாளான இன்று பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெரால்டு, தேர்தல் நடத்தும் அலுவலரும் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையருமான கண்ணனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அவருடன் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் வந்திருந்தனர். தொடர்ந்து வேட்பாளர் ஜெரால்டு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் பாளையங்கோட்டை தொகுதியிலேயே பிறந்து வளர்ந்தவன். இளைஞன் என்பதால் தொகுதி மக்களுக்காக ஓடி ஆடி உழைப்பேன். இங்கு ஒரு அரசு மேல்நிலைபள்ளி கூட இல்லை. எனவே நான் வெற்றி பெற்றால் பாளையங்கோட்டை தொகுதியில் அரசு மேல்நிலை பள்ளி மற்றும் அரசு கலைக்கல்லூரி கொண்டு வருவேன். 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் இங்கு வெற்றி பெறுவேன் என்று கூறினார்.

Tags

Next Story