வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

பாளையங்கோட்டை சதக்கத்துல்லா கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி இளைஞர் நலத்துறை மற்றும் கல்லூரி நூலகம் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில் நூலகத் துறை தலைவர் சரவணகுமார் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி துணை முதல்வர் செய்யது முகம்மது காஜா தலைமையுரை ஆற்றினார். திருநெல்வேலி மாவட்ட சப் கலெக்டர் ( பயிற்சி) மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு பொறுப்பு அலுவலர் மகாலட்சுமி கலந்துகொண்டு வாக்காளர் விழிப்புணர்வு உரையாற்றி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் கோமதி சங்கர நாராயணன், சமூக ஆர்வலர் முத்துசாமி பேராசிரியர் அந்தோணி சுரேஷ் ,ஆமீனா பானு, இசக்கியம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சாதிக் அலி அனைவருக்கும் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பாளையங்கோட்டை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையருமான கண்ணன், பாளையங்கோட்டை வட்டாட்சியர் செல்வம் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்