எஸ்டிபிஐ கட்சி புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு!

எஸ்டிபிஐ கட்சி புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு!
X

திருநெல்வேலி மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி விவசாய அணியின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

திருநெல்வேலியில் எஸ்டிபிஐ. கட்சியின் மாநில விவசாய அணி ஆலோசனை கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் உமர் பாரூக் கலந்து கொண்டார். கூட்டத்தில் புதிய மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் எஸ்டிபிஐ கட்சி விவசாய அணி தலைவராக நெல்லையைச் சார்ந்த ஷேக் அப்துல்லா , துணைத் தலைவராக மயிலாடுதுறையை சார்ந்த கண்ணன் , செயலாளராக இராமநாதபுரத்தை சேர்ந்த முகமது அப்துல்லா , இணைச் செயலாளராக செங்கல்பட்டை சார்ந்த சம்சுதீன் , பொருளாளராக திருச்சியைச் சேர்ந்த சகாபுதீன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் ஆலோசனைக் கூட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலிருந்து விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்கிட வேண்டும்.விவசாய விளை பொருட்களுக்கான உயர்தர சேமிப்புக் கிடங்குகளை அமைத்திட வேண்டும் ஆகிய முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!