மகளிர் தின கொண்டாட்டம்

மகளிர் தின கொண்டாட்டம்
X
பாளையங்கோட்டை சின்மயா மெட்ரிக் பள்ளியில் மகளிர் தின கொண்டாட்டம் இந்த மாதம் முழுவதும் நடைபெறுகிறது. ஆர்வமுடன் பெண்கள் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் பங்கெடுத்து வருகின்றனர்.

பாளையங்கோட்டை சின்மயா மெட்ரிக் பள்ளியில் மார்ச் மாதம் முழுவதும் மகளிர் தின கொண்டாட்டம் பல போட்டிகள் மற்றும் விளையாட்டுக்களுடன் நடைபெற்று வருகிறது.

முதல் வார கொண்டாட்டமான இன்று கோலப்போட்டி மற்றும் பூத்தொடுத்தல் போட்டி நடந்து கொண்டு வருகிறது. இதில் மகளிர் ஆர்வமுடன் கலந்து கொண்டு வருகின்றனர். மேலும் கொரோனா காலத்தில் வீட்டில் இருக்கும் மகளிரின் தனித் திறமைகள் மற்றும் கலைத்திறமைகளை வெளிக் கொண்டு வரும் வகையில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

Tags

Next Story