மகளிர் சுய உதவிக்குழு கடன்களை ரத்து செய்யக்கோரி விமன்ஸ் இந்தியா மூமென்ட் (WIM) ஆட்சியரிடம் மனு

மகளிர் சுய உதவிக்குழு கடன்களை ரத்து செய்யக்கோரி விமன்ஸ் இந்தியா மூமென்ட் (WIM) ஆட்சியரிடம் மனு
X

மகளிர் சுய உதவி குழு கடனை தவனை கட்ட கோரி நிதி நிறுவனங்கள் நெருக்கடி செய்வதாகவும் கடனை ரத்து செய்யக்கோரியும் விமன்ஸ் இந்தியா மூமென்ட் (WIM) சார்பாக நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

நெல்லை மேலப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பல நிதி நிறுவனங்களில் தங்கள் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக வாங்கிய கடனை தவணைகளை கட்ட கோரி நிதி நிறுவனங்கள் மக்களுக்கு நெருக்கடியைக் கொடுக்கின்றன இந்த கொரோனா இரண்டாம் அலையில் வாழ்வாதாரம் இழந்து தங்கள் வாழ்க்கை கழிப்பதற்கு தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நிதி நிறுவனங்கள் மக்களிடம் பிடிவாதமாக தவணையை செலுத்த முறையிடுகின்றனர் மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் இந்த வேளையில் மக்களின் துயர் துடைக்க மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று மகளிர் சுய உதவிக் கடன்களை ரத்து செய்து மக்களின் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை எடுக்கும்படி விமன் இந்தியா மூவ்மென்ட்‌ நெல்லை மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.ஏ.பாத்திமா தாவுத் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

மனு அளிக்கும் போது மாவட்ட செயற்குழு உறுப்பினர் பானு சிந்தா, எஸ்டிபிஐ கட்சி தொகுதி செயலாளர் பாளைசிந்தா, தொகுதி பொருளாளர் தாடி பாய் ஆகியோர் உடன் இருந்தனர்

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா