நெல்லை - தடுப்பூசி போட வாங்க - நாட்டுக்கோழி முட்டை ஒரு செட் வாங்கிட்டு போங்க

நெல்லை - தடுப்பூசி போட வாங்க - நாட்டுக்கோழி முட்டை ஒரு செட் வாங்கிட்டு போங்க
X

தடுப்பூசி செலுத்த வந்த பொதுமக்களுக்கு இலவசமாக ஆறு முட்டைகள் 

நெல்லை, காந்தி நகரில் தடுப்பூசி போட வரும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இலவச நாட்டுக் கோழி முட்டை செட் வழங்கப்பட்டது.

நெல்லை காந்தி நகரில், காந்தி நகர் மக்கள் நல சங்கம் வேண்டுகோளுக்கிணங்க மாவட்ட ஆட்சியர் ஏற்பாட்டில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்த வந்த பொதுமக்களுக்கு இலவசமாக ஆறு முட்டைகள் அடங்கிய ஒரு செட் நாட்டுக்கோழி முட்டைகள் வழங்கப்பட்டது. இதனை அப்பகுதியில் மலர் நாட்டுகோழி பண்ணை நடத்திவரும் லட்சுமிகாந்தன் என்பவர் வழங்கினார்.

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!