ஆட்டோ தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்க நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு

ஆட்டோ தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்க நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு
X

இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி 

இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணம் கோரி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் மனு அளிக்கப்பட்டது.

நெல்லை மாநகர் மாவட்டம் சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு V.விஷ்ணுவிடம் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணியின் நெல்லை மாவட்ட பொறுப்பாளர் K.சங்கர் அவர்களின் தலைமையில் ஆட்டோ முன்னணி பொறுப்பாளர்கள் இசக்கிமுத்து, கலையரசன், செந்தில்குமார், துரை, சுடலைமுத்து ஆகியோர் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சிவா,சுடலை மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ் மேலப்பாளையம் மண்டல தலைவர் சங்கர்ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!