கொரோனா பாதிப்பில் மரணமடைந்த துப்புரவு தொழிலாளருக்கு மாநகராட்சி சார்பில் அஞ்சலி..
கொரோனா பாதிப்பில் மரணமடைந்த துப்புரவு தொழிலாளருக்கு மாநகராட்சி சார்பில் அஞ்சலி
கொரோனா பாதிப்பில் மரணமடைந்த துப்புரவு தொழிலாளருக்கு மாநகராட்சி சார்பில்மலர் தூவி அஞ்சலி மற்றும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பாக கொரோனா நோய்த் தொற்று காரணமாக மரணமடைந்த மாநகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் இசக்கி திருஉருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி மற்றும் இரங்கல் கூட்டம் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இரங்கல் கூட்டத்தில் தமிழ்நாடு மாநில மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சீதாராமன், திருநெல்வேலி மாநகராட்சி செயற்பொறியாளர் எல் கே பாஸ்கர், மாநகர் நல அலுவலர் சரோஜா, உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், தஞ்சை மண்டல உதவி ஆணையாளர் ஐயப்பன், செயற்பொறியாளர் நாராயணன், உதவி செயற்பொறியாளர், சாந்தி லெனின், மற்றும் அனைத்து அலுவலர் சங்க கூட்டமைப்பின் தலைவர் பிலிப் அந்தோணி, செயலாளர் சாகுல் ஹமீது, பொருளாளர் விஜயலட்சுமி, சுகாதார அலுவலர் அசோக்குமார், விவேகானந்தன், ஆரோக்கியராஜ், மற்றும் தங்கபாண்டியன், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், செவிலியர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், பணியாளர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu