திருநெல்வேலி அரசு மருத்துவர் குழுவுடன் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு

திருநெல்வேலி அரசு  மருத்துவர் குழுவுடன் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு
X

திருநெல்வேலி அரசு மருத்துவனை முதல்வர் மற்றும் மருத்துவர்கள் குழுவுடன் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு

திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனை முதல்வர் Dr.ரவிச்சந்திரன் M.D உள்ளிட்ட மருத்துவர்கள் குழுவுடன் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனை முதல்வர் Dr.ரவிச்சந்திரன் M.D உள்ளிட்ட மருத்துவர்கள் அடங்கிய குழுவை இன்று 8.6.2021 சந்தித்தனர்.

உலகையே உலுக்கிய கொரானா பெருந்தொற்று கால கட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நெல்லை மாவட்டம் சார்பாக நடைபெற்ற பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் கொரானா பெருந்தொற்றை தடுக்க எடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் உடனிருக்கும் என தெரிவித்தனர்.

இந்த சந்திப்பில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நெல்லை மாவட்ட தலைவர் J.முகமது அலி, மாவட்ட செயலாளர் S.இம்ரான் அலி, மக்கள் தொடர்பு அதிகாரி M.S.சிராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Next Story
ai solutions for small business