நிதி நிறுவனங்களுக்கு- நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு
நிதி நிறுவனங்கள் கடனுக்கான தவணைத் தொகையினை பெறுவதில் கடின போக்கினைத் தவிர்த்திட வேண்டும்- நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
கோவிட்-19 கொரோனா பெருந்தொற்று தமிழகத்தில் அதிகமாக பரவி வருவதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 14.06.2021 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அவசரத் தேவைகளுக்காக பல்வேறு தனியார் நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற்ற மக்களிடம் மாதாந்திர தவணைத் தொகை மற்றும் அதற்குரிய வட்டித் தொகையினை உடனடியாக திரும்ப செலுத்தக் கோரி சம்பந்தப்பட்ட நிதி நிறுவன பிரதிநிதிகள் வற்புறுத்தி வருவதுடன் மகளிரை பல்வேறு வழிகளில் மிரட்டி வருவதாகவும் அதிகமான புகார்கள் வரப்பெற்றுள்ளது.
ஆகவே, கொரோனா பெருந்தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள இந்நெருக்கடியான கால கட்டத்தில் மக்களின் வாழ்வாதார பாதிப்பினை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் கடனுக்கான தவணைத் தொகையினை பெறுவதில் கடின போக்கினைத் தவிர்த்திட வேண்டும்.மேலும் இனி வரும் காலங்களில் இது தொடர்பான புகார்கள் வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்; என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு எச்சரித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu