பாளையங்கோட்டையில் மின்விளக்கு அமைத்ததற்கு நன்றி தெரிவித்த மக்கள்

பாளையங்கோட்டையில் மின்விளக்கு அமைத்ததற்கு நன்றி தெரிவித்த மக்கள்
X

கணபதி சுப்ரமணியன் மாவட்டச்செயலாளர் , ஜி. முருக முரளிதரன் இளநிலை ஆலோசகர், எஸ். முத்துசாமி ஆலோசகர் 

பாளையங்கோட்டையில் தெரு மின்விளக்கு அமைத்ததற்கு அப்பகுதி மக்கள் மாநகராட்சி மற்றும் மின்வாரிய பணியாளர்களை நேரில் அழைத்து கவுரவித்தனர்.

பாளையங்கோட்டை கோபாலசாமி கோயில் அருகில் வடக்கு மாடவீதியில் தெருமுனையில் தெரு மின் விளக்கு இல்லாமல் இருண்ட பகுதியாக இருந்தது. இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் நடமாட பயந்து கொண்டிருந்தார்கள். திருநெல்வேலி மின்நுகர்வோர் மையத்திற்கு தெருவில் மின்விளக்கு அமைக்க வேண்டி தகவல் தெரிவித்தனர். திருநெல்வேலி மின்நுகர்வோர் மையத்தின் சார்பாக பெட்காட் மாவட்ட செயலாளர் முனைவர் கவிஞர்.கோ. கணபதி சுப்பிரமணியன் மாநகராட்சி செயற்பொறியாளர் .எல்.பாஸ்கர் அவர்களிடம் புதிதாக தெரு மின்விளக்கு அமைக்க விண்ணப்பம் செய்திருந்தார்.

திருநெல்வேலி மாநகராட்சியில் துரிதமாக செயல்பட்டு புதிதாக தெரு மின்விளக்கு அமைத்துக் கொடுத்த மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன், செயற் பொறியாளர்கள் பாஸ்கர், உதவி ஆணையர் பிரேமானந்த், உதவி செயற்பொறியாளர் பைஜூ, உதவி பொறியாளர் பட்டுராஜன், செயல்திறன் பணியாளர்கள் ஜீவானந்தன் ஆறுமுகம், ஆகாஷ் பணியாளர் வெங்கடேஷ் ஆகியோருக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.


Next Story
ai solutions for small business