வள்ளியூர் அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் மினி பேருந்து சிக்கியது

வள்ளியூர் அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் மினி பேருந்து சிக்கியது
X
நெல்லை - வள்ளியூர் அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழை நீரில் மினி பேருந்து சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழை நீரில் மினி பேருந்து சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே சுரங்கப் பாதையில் எந்நேரமும் முழு அளவில தண்ணீர் தேங்கியிருக்கும். இதனால் அந்த சாலை வழியாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.


இந்நிலையில் வள்ளியூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற தனியார் மினி பேருந்து, ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் அதிகமாக இருப்பதை அறியாமல் பேருந்தை ஓட்டுனர் இயக்கியுள்ளார்.

இதையடுத்து சுரங்கப் பாதையில் தண்ணீரில் மூழ்கிய பேருந்தில் தண்ணீர் நிரம்பியதால் பேருந்து பழுதாகி நின்று விட்டது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் இறங்க முடியாமல் தவித்தனர். பின்னர் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பேருந்திற்குள் சென்று பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

Next Story