நெல்லை மாநகராட்சியில் 26 வது வார்டை சிறந்த வார்டாக மாற்றுவேன்: திமுக வேட்பாளர் பிரபாசங்கரி உறுதி
நெல்லை மண்டல அலுவலகத்தில் 26வது வார்டு திமுக வேட்பாளர் பிரபாசங்கரி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
நெல்லை மாநகராட்சி 26வது வார்டு திமுக வேட்பாளராக மாவட்ட திமுக மகளிரணியைச் சேர்ந்த பிரபாசங்கரி அறிவிக்கப்பட்டார். இவர் திமுக விவசாயஅணி அமைப்பாளர் பொன்னையாபாண்டியன் மனைவி ஆவார், இவரது மாமனார் விஸ்வநாத பாண்டியன் முன்னாள் துணை மேயராக தொடர்ந்து 2 முறை பத்து ஆண்டுகளாக பதவி வகித்தவர். விஸ்வநாத பாண்டியன் அதிமுக ஆட்சியிலும் துணைமேயராக பதவி வகித்து, அப்போது திமுக தலைவர் கருணாநிதியால் பாராட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நெல்லை மண்டல அலுவலகத்தில் தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். உடன் மத்திய மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பொன்னையாபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். வேட்பாளர் பிரபாசங்கரி கூறும் போது, என்னை திமுக வேட்பாளராக அறிவித்த திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது கணவர் மாமன்ற உறுப்பினராக இருந்த போதும், பதவி இல்லாத காலங்களிலும், நெல்லை டவுண் பகுதியில் கவனமெடுத்து நாங்கள் செய்து வந்த பணிகளை மக்கள் நன்கு அறிவார்கள், அனைவருக்கும் வீடு திட்டத்திலும், குடிசை மாற்று வாரியத்தின் திட்டத்தின் கீழும் ஏழை எளிய மக்கள் பலருக்கும் அரசின் திட்டங்கள் கிடைக்க ஏற்பாடுகள் செய்து கொடுத்தோம், எந்த பாகுபாடும் இன்றி கொரோனா பேரிடர் காலங்களிலும், கனமழை காலங்களிலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பணி செய்தோம். அனைத்து தரப்பு மக்களும் நிச்சயம் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன். மக்களின் நலனில் தொடர்ந்து பாடுபடுவேன். நெல்லை மாநகராட்சியில் 26 வது வார்டை சிறந்த வார்டாக மாற்றுவேன் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu