நாங்குநேரியில் இரண்டரை கிலோ கஞ்சாவுடன் இளைஞர் கைது
பைல் படம்.
நெல்லை மாவட்டம் நான்குநேரி, வள்ளியூர், களக்காடு, பணகுடி பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தன. இதனையடுத்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் கஞ்சா விற்பனையை தடுக்கும் பொருட்டு தனிப்பிரிவு காவல்துறை அதிகாரிகளுக்கு கஞ்சா விற்பனை குறித்த தகவல்களை திரட்டும் படி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் நாங்குநேரி மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஒரு இளைஞர் கையில் பையுடன் சுற்றித்திரிந்து உள்ளார். இதனை நோட்டமிட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் சங்கர் அவரை பிடித்து விசாரணை நடத்தினார். அவர் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதனுள்ளே கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்பு அந்த இளைஞரை விசாரித்த போது அவர் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற ராம்கி, (வயது 21 )என தெரியவந்தது.
மேலும் அவரிடமிருந்து இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்து இவரைப் பிடித்து தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் சங்கர் நாங்குநேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்பு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
வள்ளியூர், பணகுடி பகுதிகளில் கஞ்சா புழக்கத்தில் இருப்பதை கட்டுப்படுத்த அனைத்து பகுதிகளிலும் சோதனைகளை காவல்துறையினர் அதிகரிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu