எங்க ஊரு நிஜ ஹீரோ-ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரிதாங்க-பாளையங்கோட்டை பகுதி மக்கள் மகிழ்ச்சி
கொரோனா காலத்தில் தவிப்பவர்களுக்கு உதவும் வேளாண் அதிகாரி
கொரோனா காலத்தில் தவிக்கும் வீட்டு வேலை, முடிதிருத்தும், சலவை தொழிலாளர்களுக்கு ஓய்வு பெற்ற வேளாண்மை துறை அதிகாரி.தானாக முன்வந்து உதவி செய்து வருகிறார்
தற்போது கொரோனா இரண்டாவது அலை தாக்கம் உள்ளதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளதால் பலதரப்பட்ட மக்களும் பொருளாதார நிலையில் கடும் சிரமத்தில் உள்ளனர். இந்நிலையில் பாளையங்கோட்டை அருகே உள்ள கேடிசி நகரைச் சேர்ந்த வேளாண்மை துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்ற ராமச்சந்திரன் தனது சொந்த செலவில் வேலையின்றி தவிக்கும் முடிதிருத்தும் தொழிலாளிகள், சலவைத் தொழிலாளிகள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், தூய்மை தொழிலாளிகள் உள்ளிட்ட நலிவடைந்தவர்களுக்கு உதவ வேண்டுமென முடிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று ராமச்சந்திரன் தனது இல்லத்தில் வைத்து அனைத்து தொழிலாளிகளையும் அழைத்து அவர்களது குடும்பத்திற்கு தேவையான அரிசி காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது.அப்போது நோய் எதிர்ப்பு சக்தியான கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.தொடர்ந்து வேளாண் அதிகாரி ராமச்சந்திரன் கூறுகையில் கொரோனா காலத்தில் வருவாய் இன்றி தவிக்கும் இதுபோன்று தொழிலாளர்களுக்கு அனைவரும் மன மகிழ்ச்சியோடு உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu